• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருமணமாகி 22 நாளே ஆன இளைஞர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு...!

திருமணமாகி 22 நாளே ஆன இளைஞர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு...!

உயிரிழந்த பிரபாகரன்

உயிரிழந்த பிரபாகரன்

ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை பெற்று வந்த சமீபத்தில் திருமணமான இளைஞர் பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  • Share this:
ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை பெற்று வந்த சமீபத்தில் திருமணமான இளைஞர் பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

பின்னர் அவருக்கு கொரோனா அறிகுறி தெரிந்ததால் , திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டு, கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also read... பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமலேயே போகலாம் - WHO எச்சரிக்கை

பின்னர் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, மூச்சு திணறலால் அவதிப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் இன்று அதிகாலை பிரபாகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணமான 22 நாளில் 24 வயதான இளைஞர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: