கண் விழித்திரையில் கொரோனா வைரஸ் தன்னை பெருக்கிக் கொள்ளூம் தன்மை கொண்டது என ஜெர்மனியில் அண்மையில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் கண்கள் மூலம் உடலுக்குள் நுழைய முடியும் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாக நமக்கு தெரிந்த உண்மை. ஆனால் தற்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது. எப்படி நுரையீரல் செல்களில் ஒட்டிக் கொண்டு தன்னை பன்மடங்கு பெருக்கிக் கொண்டதோ அதே போல் விழித்திரையிலும் பெருக்கிக் கொள்ளும் தன்மை கொண்டுள்ளது கொரோனா வைரஸ் என்று ஜெர்மனியில் உள்ள Max Planck Institute for Molecular Biomedicine மற்றும் Westfalische Wilhelms-Universitat Munster நிறுவங்களை சேர்ந்த ஆய்வாளர்கள், மனித விழித்திரை செல்கள் போன்ற செல்களை உருவாக்கி அதில் கொரோனா வைரஸ் செலுத்தி அந்த செல்களில் தொற்றை உருவாக்கியுள்ளனர்.
பிறகு அந்த செல்களில் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை அளவிட்டு பார்க்கும் போது அவை குறிப்பிட்ட காலத்துக்கு பின் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் விழித்திரையில் கொரோனா வைரஸ் தன்னை பெருக்கிக் கொள்ள முடியும் என்று தெரிய வந்துள்ளது.
வைரஸ் கண்களில் பெருக்கிக் கொள்வது புதிதல்ல , ஏற்கெனவே வேறு வைரஸ்களும் இதுபோன்ற தன்மை கொண்டுள்ளன என்று எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் வசந்தா கூறுகிறார். விழித்திரையில் கொரோனா வைரஸ் இல்லாத போதிலும் ரத்த குழாய் அடைப்பு காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தற்போது விழித்திரையிலேயே பெருக்கிக் கொள்ளலாம் என்பதால் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.