Home /News /tamil-nadu /

காமராஜர் கொண்டுவந்தது காங்கிரஸ் மாடல் அல்ல அதுவும் திராவிடம் தான் - ஆ.ராசா

காமராஜர் கொண்டுவந்தது காங்கிரஸ் மாடல் அல்ல அதுவும் திராவிடம் தான் - ஆ.ராசா

ஆ.ராசா

ஆ.ராசா

Dravidian Model : காமராஜர் கொண்டுவந்தது காங்கிரஸ் மாடல் அல்ல அதுவும் திராவிடம் தான் என கோவையில் நடந்த திமுக பயிரங்க கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., கூறினார்.

    திராவிட மாடல் தான் தேசிய மாடல் என்ற தலைப்பில் கோவை காளப்பட்டியில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் பயிலரங்கம் நடைபெற்றது. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் அ. ராசா, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மனிதனை மனிதனாக நடத்துவது திராவிட மாடல்

    இந்த நிகழ்வில் முன்னதாக தலைமை வகித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், மனிதனை மனிதனாக நடத்துவது திராவிட மாடல். சில பேர் குஜராத் மாடல் என்கிறார்கள். அங்கு மின்வெட்டு உள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கிவருவது திராவிட மாடல். ஒன்றிய திட்டத்தின் மூலம் கிடைக்க வேண்டிய தடங்களால் சில நாட்கள் மின்வெட்டு இருந்தது. பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் நம்முதல்வரின் ஆட்சியை பார்த்து  பாராட்டி வருகின்றனர். அதுதான் நம் முதல்வரின் திராவிட மாடல் என்று கூறினார்.

    அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்

    இதைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய மாநில திட்டக் குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது போல சகமனிதனை மனிதனாக  நினை என்றுதான் கூறி வருகிறோம். அதுதான் நமது அடிப்படை. ஒன்றிய அரசு அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு எவ்வளவு தடைகளை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

    முதலில் கொள்கையை ரீதியாக எதிர்த்து செயல்படுகிறார்கள். இரண்டவது தடையாக ஆளுநர் மூலம் தடையை ஏற்படுத்துகின்றனர். மூன்றாவதாக ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டி நிதியை தராமல் தடையை ஏற்படுத்துகின்றனர்.
    ஒன்றியம் என்றால் எரிகிறது. ஆனால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளதை தான் நாம் சொல்கிறோம்.

    ஒன்றிய அரசு பத்தாண்டுகளில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. இலவச வீட்டு மனை கட்டுவதற்கு ஒன்றிய அரசு 30 விழுக்காடு மாநில அரசு 70 விழுக்காடு நிதி தருகிறது. இந்திராகாந்தி பென்ஷன் ஸ்கீம் திட்டத்தில் ஆயிரம் ரூபாயில் 200 ரூபாய் மட்டுமே ஒன்றிய அரசு கொடுக்கிறது. 800 ரூபாய் மாநில அரசு கொடுக்கிறது.

    மாநிலங்களில் அதிகமாக வரிவசூல் செய்வது மத்திய அரசு. ஆனால் மாநில அரசை வரி குறைப்பு செய்ய வலியுறுத்துகிறது. இது எந்த விதத்தில் நியாயம். விலைவாசியை குறைக்க நாம் வலியுறுத்தினால் செய்யும் வேலையை மட்டும் செய்யுங்கள் பலனை எதிர்பார்க்காதீர்கள் என நிதி அமைச்சர் தெரிவிக்கிறார். ஒருவருடத்தில் மட்டும் இன்னுயிர் காப்போம் திட்டதின் கீழ் 52 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர். பெண்களுக்கு இலவச பயணம் மூலம் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது. பணம் படைத்தவர்கள் மட்டும் வளரும் மாடல் நமது மாடல் அல்ல என தெரிவித்தார்.

    காமராஜர் கொண்டுவந்தது காங்கிரஸ் மாடல் அல்ல

    தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி., பேசுகையில், தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் திராவிட மாடல் பேசப்படுகிறது. இதற்கு காரணம் முதல்வர் மு.க. ஸ்டாலின். செந்தில் பாலாஜி அதிமுகவில் இருக்கும் பொழுதே ஆட்சி பணியில் சிறப்பாக இருப்பார் என்பதை நான் அறிவேன்.

    பயிலரங்கம்


    திராவிடத்தை காப்பாற்ற கடவுள் நம்பிக்கை உள்ள செந்தில் பாலாஜி இந்த கருத்தரங்கை நடத்துவதை பாராட்டுகிறேன் என்றார்.
    பின்னர் பூனா கருத்தரங்கிற்கு நான் சென்றபோது பைலட் செல்ஃபி எடுக்க  முற்பட்டார். அப்போது அவரிடம் விசாரித்தபோது, அதற்கு பைலட் 2ஜி என என்னை தெரிவித்தார். என்னை எங்கே வரை கொண்டு விட்டுள்ளது பார்த்தீர்களா என நகைச்சுவையாக கூறினார்.

    தொடர்ந்து பேசிய ஆ.ராசா, வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்துவது தான் ஆரிய மாடல். வருணாசிரமத்தை ஆட்சி அதிகாரத்தில் கொண்டுவந்து திணித்தார்கள். கல்வியை மறுத்த மதம் சனாதன மதம். இந்து என்ற பெயரைக் கொடுத்தது ஆங்கிலேயர்கள். பெண்களை வீட்டில் இருக்க சொன்னவர்கள் ஆரியர்கள். சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயன்றவர்கள் ஆரியர்கள். அதை நேருவும் அம்பேத்கரும் உடைத்தனர்.

    Must Read : நூல் விலை உயர்வு.. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக் - ரூ.250 கோடி வர்த்தகம் பாதிக்கும் நிலை

    பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை கொடுத்தது திராவிடம். ஆரிய மாடல் திராவிட மாடலை கவனித்து பாருங்கள். பெரியாரின் நோக்கம் கடவுள் எதிர்ப்பு மட்டுமல்ல பெண்ணியம், சாதி ஒழிப்பு பெண்களுக்கு சொத்தில் பங்கு. சனாதனத்தை எதிர்த்தவர்கள் ஊருக்கு வெளியே அனுப்பப்பட்டனர். அதுவே சேரிகளாக மாறின. 1996 ஆம் ஆண்டில் கலைஞர் சமத்துவபுரத்தை உருவாக்கினார்.
    உடல் ஊனமுற்றவர்கள் மாற்றுத்திறனாளி என அழைக்கப்பட்டனர். இது கலைஞர் ஆட்சியில் நடைபெற்றது.

    அரவாணி என அழைக்கப்பட்டவர்கள் இன்று திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்றனர். இது திராவிட ஆட்சியில் நடந்தது.
    இருளர் சமுதாயத்தை தேடிச்சென்று உதவியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுதான் திராவிட மாடல். காமராஜர் கொண்டுவந்ததும் காங்கிரஸ் மாடல் அல்ல அதுவும் திராவிடம்தான்.

    எதைக் கொடுத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்  படிப்பார்கள் என பள்ளியில் உணவை கொடுத்தது திராவிட மாடல்.
    தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வியில் உயர்த்தியது திராவிடம். ஆரியத்தை தூக்கி எறிந்து திராவிடத்தை தூக்கிப் பிடிப்போம் என உரையை முடித்தார் ஆ.ராசா.

    செய்தியாளர் - ஜெரால்ட், கோவை.
    Published by:Suresh V
    First published:

    Tags: A Raja, Coimbatore, DMK, Dravidam, Kamaraj

    அடுத்த செய்தி