Home /News /tamil-nadu /

யார் குற்றவாளி? நானா அல்லது ஜெயலலிதாவா- ஆ.ராசா ஆவேசம்!

யார் குற்றவாளி? நானா அல்லது ஜெயலலிதாவா- ஆ.ராசா ஆவேசம்!

ஆ.ராசா

ஆ.ராசா

2 ஜி வழக்கு பாஜகவிற்கு மிகப்பெரிய அரசியல் அறுவடை என்று கூறிய ஆ.ராசா, அந்த வழக்கில் தான் விடுவிக்கப்பட்டதை கண்டு அக்கட்சி அதிர்ச்சியில் உள்ளதாக கூறினார்.

  • News18
  • Last Updated :
    2ஜி வழக்கில், தான் குற்றமற்றவன் என தீர்ப்பு தெளிவாக உள்ளதாக கூறியுள்ள ஆ.ராசா, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று உள்ளதா? என வினவி இருக்கிறார்.

    2 ஜி வழக்கை விமர்சித்து முதல்வர் பேசியிருந்த நிலையில், அதுகுறித்து விவாதிக்க தயார் என ஆ.ராசா சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா. 2 ஜி வழக்கில் ஒரு நாள் கூட, தான் வாய்தா வாங்கவில்லை என்றார். இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது என தீர்ப்பு வந்திருப்பதாக கூறிய ஆ.ராசா, அதனை செய்தியாளர்களிடம் வாசித்தும் காட்டினார்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில், அரசமைப்பு சட்டத்தின்மீது நடத்தப்பட்ட படுகொலை என்று நீதிபதி குறிப்பிட்டு இருப்பதாக ஆ.ராசா கூறினார்.

    Also read... பாஜகவின் வேல் யாத்திரை... பொது மக்களுக்கு கொரோனா பரப்பியதாக 135 பேர் மீது வழக்கு...!



    2 ஜி வழக்கு, பாஜகவிற்கு மிகப்பெரிய அரசியல் அறுவடை என்று கூறிய ஆ.ராசா, அந்த வழக்கில், தான் விடுவிக்கப்பட்டதை கண்டு அக்கட்சி அதிர்ச்சியில் உள்ளதாக கூறினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, தான் எவ்வகையிலும் அவதூறாக விமர்சிக்கவில்லை என்றும் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். அவரை ஆத்தா என்று கூறியது வட்டார வழக்கு என்றும் அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: A Raja, Jayalalitha

    அடுத்த செய்தி