• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சமூக வலைதளங்கள் மூலம் கிளிகளை விற்பனை செய்த கும்பல் கைது..

சமூக வலைதளங்கள் மூலம் கிளிகளை விற்பனை செய்த கும்பல் கைது..

Youtube Video

சென்னையில் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து அரியவகை கிளிகளை விற்பனை செய்து வந்த மருத்துவர் உள்ளிட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
    சட்டவிரோதமாக கிளிகளை பிடித்து விற்பனை செய்து வந்த கும்பல் சென்னையில் பிடிபட்டுள்ளது. 53 அரியவகை கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் கிளிவிற்பனை கும்பல் குண்டில் சிக்கியது எப்படி ?

    கடந்த சில மாதங்களாக அரிய வகை கிளிகள் சென்னையில் சமூக வலைதளங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக தொடர் புகார்கள் வனத்துறையினருக்கு வந்துள்ளது. புகார்களை தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள வனச்சரக அலுவலகம், வனத்துறை ஆய்வாளர் தலைமையில், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது .

    கிளி விற்பனை கும்பல்கள் ரகசியமாக தனி தனி குழுக்கலாக பிரிந்து செயல்படுவது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. கிளிகள் விற்பனை தொடர்பாக தனி வாட்சப் குழுக்கல் மற்றும் ரகசிய சமூக வலைதள பக்கங்கள் செயல்பட்டுள்ளது. இந்த கும்பல்கள் அனைத்தையும் குறிவைத்து பிடிக்க திட்டம் போட்டுள்ளனர் வனத்துறையினர்.

    வலைதள பக்கம் ஒன்றில் இந்திய பெருங்கிளிகள், மலை கிளிகள், விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் வந்துள்ளது. கிளிகளை வாங்குவது போன்று அவர்களை தொடர்பு கொண்ட வனத்துறை அதிகாரிகள் சென்னை சாந்தோமில் கிளிகள் விற்பனை நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளனர்.

    அங்கு கிளிகளை விற்பனை செய்ய முயன்ற 20 வயதான முத்துசெல்வன், பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த 31 வயதான ஜெகன் ஆகியோரை பிடித்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 11 கிளிகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இராயபுரத்தை சேர்ந்த மருத்துவர் 55 வயதான முகமதுரமளி என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து 40 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் படிக்க... காதல் நாடகமாடி சீரியல் நடிகையை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்குப்பதிவு

    மேலும் கிளி விற்பனையில் தொடர்புடைய தண்யார்பேட்டையை சேர்ந்த 27 வயதான சதீஷ் குமார், பாரிமுனையை சேர்ந்த கார்த்தி ஆகியோரை கைது செய்தனர். சிக்கியவர்களிடம் நடத்திய விசாரணையில் வனப்பகுதிகளுக்கு சென்று கிளிகளை பிடித்து வந்து , குஞ்சிகளை ஜோடி ரூ 3000 முதல் 5000 வரை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    பிடிபட்டவர்களிடம் இருந்து மொத்தமாக 53 கிளிகள் பறிமுதல் செய்த வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர். வன உயிரின் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாதுகாக்கப்பட்ட கிளிகள் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும், கிளிகள் தடைசெய்யப்பட்ட பட்டியல் 4ல் இடம்பெறுள்ளதால் சிறைதண்டனையும் ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.





    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: