Home /News /tamil-nadu /

மகுடம் சூடுவாரா ஆ.ராசா?... அரசியல் சூட்டில் ‘ஜில்’ நீலகிரி...!

மகுடம் சூடுவாரா ஆ.ராசா?... அரசியல் சூட்டில் ‘ஜில்’ நீலகிரி...!

தலித் என்பதால் ராசா மீது திட்டமிட்டு ஊழல் புகார் வைக்கப்பட்டுள்ளதாக தொகுதி திமுகவினர் கூறுகின்றனர்.

தலித் என்பதால் ராசா மீது திட்டமிட்டு ஊழல் புகார் வைக்கப்பட்டுள்ளதாக தொகுதி திமுகவினர் கூறுகின்றனர்.

தலித் என்பதால் ராசா மீது திட்டமிட்டு ஊழல் புகார் வைக்கப்பட்டுள்ளதாக தொகுதி திமுகவினர் கூறுகின்றனர்.

  • News18
  • Last Updated :
கடந்த முறை 2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என தேர்தல் களத்தில் தோல்வியடைந்த ஆ.ராசா, தற்போது குற்றமற்றவர் என்ற நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் உற்சாகமாக தேர்தலை சந்திக்க இருக்கிறார்.

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அனைவரும் செல்லும் சுமார் 6500 அடி உயரத்தில் உள்ள நீலகிரியின் அரசியல் களம் தற்போது சூடாக இருக்கிறது. திமுக சார்பில் நீலகிரி தொகுதியில் களமிறங்கியுள்ள வேட்பாளர் ஆ.ராசாவுக்கு சாதகமாக அங்கு இப்போது அலை வீசுகிறது.

2 ஜி வழக்கில் சிக்கி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கூறிய பின்னர் அவர் சந்திக்கும் முதல் தேர்தல் இது. கடந்த 2014 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட ராசா, அந்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்டிருந்தார்.

பெரம்பலூர் பொதுத்தொகுதியாக மாற்றப்பற்ற பின்னர் 2009 தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஆ. ராசா, 2014-ல் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார்.

அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது 2 ஜி விவகாரமே. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், அவர் இந்த தேர்தலை உற்சாகமாகவே எதிர்கொள்கிறார். தற்போது, அதிமுக வேட்பாளர் தியாகராஜனை எதிர்த்து ராசா போட்டியிடுகிறார்.



“மே 23-ம் தேதி பாஜகவை இந்திய வாக்காளர்கள் தூக்கி எறிவார்கள். மோடியின் வளர்ச்சியே இல்லாத வெற்று ஆட்சியால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். பொருளாதாரம் அதள பாதாளத்தில் கிடக்கிறது.

பணமதிப்பிழப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூறுகின்றனர்” என்று ஆ. ராசா நியூஸ் 18-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நீலகிரி வாசிகளின் மனநிலை எப்படி என்று பார்க்கையில், “பாஜக உடன் கூட்டணி வைத்தது அதிமுகவின் முடிவுரை. பல்வேறு காரணங்களால் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழர்களின் பெருமையை மோடி வேதனைப்படுத்தியதாக நாங்கள் உணர்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவருமே டெல்லி ஆட்சியாளர்களின் விசுவாசிகளாக இருக்கின்றனர். இந்த முறை திமுகவுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டேன். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் எதுவும் இல்லை” என்கிறார் அதிமுக விசுவாசியான ஆட்டோ ஓட்டுநர் ரகு.

பழங்குடி மக்கள் அதிகமாக உள்ள நீலகிரி தொகுதியில் ராசாவுக்கு வரவேற்பு இருக்கவே செய்கிறது. “ராசா எளிதான அணுகக் கூடியவராக இருக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவர் அமைச்சராவது உறுதி” என்கிறார் வாட்ச் கடை வைத்துள்ள வில்லியம்.

தலித் என்பதால் ராசா மீது திட்டமிட்டு ஊழல் புகார் வைக்கப்பட்டுள்ளதாக தொகுதி திமுகவினர் கூறுகின்றனர்.

டிடிவி தினகரனின் அமமுக, அதிமுகவின் ஓட்டுவங்கியை உடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “தினகரனின் கட்சி வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அதிமுக - பாஜக கூட்டணி வாங்கும் வாக்குகளை அவர் முந்தலாம்” என்கிறார் உள்ளூர் அரசியல் விமர்சகர் குருசாமி.

“ராசாவின் வெற்றி 100% அல்ல 200% உறுதி செய்யப்பட்டது. நீலகிரியில் அவர் பிரபலமானவராக இருக்கிறார். கடந்த முறை பொய்யான பிரசாரத்தால் அவர் தோற்கடிப்பட்டார்” என்று கூறுகிறார் கோவையைச் சேர்ந்த அரசியல் நிபுணர் ரதன் குமார்.

நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது.

Also See...

Published by:Sankar
First published:

Tags: Election 2019, Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Candidates, Lok Sabha Key Constituency, Nilgiris S22p19, Tamil Nadu Lok Sabha Elections 2019, West Tamil Nadu Lok Sabha Elections 2019

அடுத்த செய்தி