திமுக மூன்று நிபந்தனைகளுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து கட்டுப்படுத்தியது - ஆ.ராசா

திமுக மூன்று நிபந்தனைகளுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து கட்டுப்படுத்தியது - ஆ.ராசா

ஆ.ராசா

பாஜக கூட்டணி அமைக்க திமுக மூன்று நிபந்தனைகளை விதித்து பாஜகவின் ஜீவாதாரமான கொள்கைகளை கட்டுப்படுத்தியது என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்.

  • Share this:
    பாஜக கூட்டணி அமைக்க திமுக மூன்று நிபந்தனைகளை விதித்து பாஜகவின் ஜீவாதாரமான கொள்கைகளை கட்டுப்படுத்தியது என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்.

    இது குறித்து ஆ.ராசா சென்னை அண்ணாநகரில் பேசுகையில், திமுக பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு குறைந்தபட்ச செயல் திட்டத்தை முன்வைத்தது. அதன்படி, பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருக்கும் வரை, பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டக் கூடாது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தான 370- ஐ எடுக்கக் கூடாது. மற்றும் பொது சிவில் சட்டம் கொண்டுவரக் கூடாது. இந்த மூன்றுதான் பாஜகவின் ஜீவாதாரக் கொள்கைகள். இந்த மூன்றையும் திமுக தடுத்து நிறுத்தி கட்டுப்படுத்தி வைத்தது.

    அதன் பின்னர், பாஜக-அதிமுக கூட்டணி அமைந்த பின்னர், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து 370 எடுக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோயில் கட்டப்பட்டது. மற்றொன்று சிவில் சட்டம். அது எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

    நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது பாஜகவின் தத்துவம் மற்றும் அதன் லட்சியம் நிறைவேறாமல், மதவாதம் வளராமல் அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தோம். ஒப்பந்தம் செய்து கொண்டுதான் கூட்டணி அமைத்தோம். அதை அவர்கள் மீறாமல் பார்த்துக் கொண்டோம். ஆனால் பாஜகவுடன்  அதிமுக கூட்டணி அமைந்தவுடன் நிலைமை மாறிவிட்டது.

    பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிற கட்சிகளின் கட்டுமானத்தை அடித்து ஒழித்து, சீரழித்து, சிதைக்கிறது. இந்த வேலையை நரேந்தி மோடி தொடர்ந்து செய்து வருகிறார். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் திமுக மீதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் அவர்களால் கை வைக்க முடியவில்லை.

    நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இதிலிருந்து ஒரு ஆளைக்கூட பாஜகவால் கலைக்க முடியாது. தமிழ்நாட்டு அரசியலில் இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் வெற்றிக்குப் பின்னர், திமுக  பிற கட்சிகள், பிற மாநில கட்சிகள் மத சார்பற்ற கூட்டணி அமைத்து பாஜகவை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும். அதற்காக இந்த தேர்தல் முக்கியமானது” இவ்வாறு ஆ.ராசா கூறினார்.

    மேலும், “நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற 100 நாளில் மக்களின் பிரச்னைகளை தீர்த்துவைப்பேன் என்று சொன்ன தலைவர் இந்தியாவிலேயே மு.க.ஸ்டாலின் ஒருவர்தான்” என்றும் கூறினார்.

    1992 ஆம் ஆண்டு பாஜவுடன் திமுக கூட்டணி அமைத்தது. அதேபோல, 1999 ஆம் ஆண்டு, ஏழு ஆண்டுகள் கழித்து பாஜகவுடன் திமுக மீண்டும் கூட்டணி அமைத்தது. “1999 ஆம் ஆண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கும் சூழல் உருவானது. அதேநேரத்தில் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற உத்தரவாதத்தோடுதான் பாஜகவுடன் திமுக கூட்டணி சேர்ந்தது.” என மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: