மனைவி மரணம்... தனியாளாக நிற்கும் ஆ.ராசா... இணையத்தில் வைரலாகும் உருக்கமான புகைப்படம்

ஆ.ராசா மற்றும் அவரது மனைவி பரமேஷ்வரி

மனைவி பிரிவை தாங்க முடியாமல் ஆ.ராசா தனியாக நின்று கலங்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோய் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன் அவரது உயிர் பிரிந்தது. சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரியின் உயிர் பிரிந்ததாக சென்னை ரேலா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோய்க்காக 6 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து, அவருக்கு கீமோதெரபி அளிக்கப்பட்ட நிலையிலும், அவரது உடல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அவருக்கு நோய் தொற்று தீவிரமானது.

    Also Read : முகக்கவசம் அணியாதவரிடம் காரிலிருந்து இறங்கிவந்து முகக்கவசம் வழங்கிய அணிய வலியுறுத்திய மு.க.ஸ்டாலின்

    பரமேஸ்வரியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எனினும், சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரியின் உயிரிழந்தார். அவரது மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து பரமேஸ்வரியின் உடல் வேலூரில் உள்ள அவரது சொந்த ஊரில் நடந்தது. இறுதி சடங்கில் திமுக எம்.எல்.ஏ உதயநிதி, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் நேரு, பொன்முடி உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இணையத்தில் வைரலாகும் புகைப்படம்


    இதனிடையே தனது அரசியல் பயணத்தில் எல்லா தருணங்களிலும் உடனிருந்த மனைவியின் பிரிவு தாங்க முடியாமல் ஆ.ராசா சோர்வு அடைந்துள்ளதாக அவரது ஆதரவாரளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மனைவி பரமேஸ்வரி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆ.ராசா தனியாளாக நிற்கும் உருக்கமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் தங்களது ஆறுதலையும் வருத்தங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published: