நீலகிரியை கைப்பற்றிய ஆ.ராசா..!

அதிமுக சார்பில் கோபாலகிருஷ்ணனுக்குப் பதிலாக தியாகராஜன் என்பவரை கட்சி முன்னிறுத்தியதி அதிமுக-வுக்குப் பெரும் பின்னடைவாகவே இருந்தது.

நீலகிரியை கைப்பற்றிய ஆ.ராசா..!
ஆ ராசா
  • News18
  • Last Updated: May 23, 2019, 3:20 PM IST
  • Share this:
நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா அதிமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த முறை தான் தோல்வியடைந்த நீலகிரியிலேயே இம்முறையும் களம் கண்டார் திமுக வேட்பாளர் ஆ.ராசா. திமுக மற்றும் அதிமுக நேரடியாகப் போட்டியிட்ட எட்டு மக்களவைத் தொகுதிகளில் நீலகிரியும் முக்கியத் தொகுதியாகும்.

1990-கள் வரையிலும் காங்கிரஸின் கோட்டையாகவே இருந்து வந்த நீலகிரி தொகுதி அதன் பின்னர் கலவையான அரசியல் களமாக மாறிவிட்டது. கடந்த 2009-ம் ஆண்டுத் தேர்தலில் வென்ற ஆ.ராசா, 2014-ம் ஆண்டுத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனிடம் தோல்வியுற்றார்.


ஆனால், இம்முறை அதிமுக சார்பில் கோபாலகிருஷ்ணனுக்குப் பதிலாக தியாகராஜன் என்பவரை கட்சி முன்னிறுத்தியதி அதிமுக-வுக்குப் பெரும் பின்னடைவாகவே இருந்தது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னை, மலைவாழ் மக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாதது, குடிநீர் மற்றும் வேளான் தேவைகள் எனப் பல பிரச்னைகள் ஆளும் அதிமுக-வுக்குப் பின்னடைவானது.

நீலகிரி தொகுதியில் பரிட்சையமான வேட்பாளராக ஆ.ராசா இருப்பது திமுக-வுக்குக் பெரிய பலமாகவே பார்க்கப்பட்டது. நீலகிரி தொகுதியின் பிரச்னைகளை சரிவர தீர்த்துவைப்பதாக ஆ.ராசா மேற்கொண்ட பரப்புரைகள் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது.
First published: May 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading