தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்த் நேரில் விளக்கம் தருவாரா?

ரஜினிகாந்த்
- News18
- Last Updated: February 25, 2020, 11:13 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்த் நேரில் விளக்கம் தருவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேரில் சென்று பார்த்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இது சமூக விரோதிகளால் நடைபெற்ற ஒரு சம்பவம் என்று தெரிவித்திருந்தார்.
அந்த கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அதன்பிறகு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை ஆணையம் மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் கருத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ரஜினிகாந்த்துக்கு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீங்கள் பேசியது குறித்து விளக்கம் தர வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி இன்று பிப்ரவரி 25-ஆம் தேதி ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தான் வருவதால் ரசிகர்கள் ஒன்றுகூட நேரிடும் இதனால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே நீங்கள் என்ன கேள்வி முன் வைக்கிறீர்களோ அதனை கடிதம் மூலம் கேளுங்கள் நான் எழுத்துப்பூர்வமாக விளக்கம் தருகிறேன் என கடந்த 23-ஆம் தேதி ரஜினிகாந்த் விலக்கு கேட்டு நோட்டீஸ் மனுவை அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ரஜினியின் மனு குறித்து பதில் ஏதும் அளிக்கவில்லை. எனவே இன்று ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிலையில் அவருக்கு பதிலாக ரஜினியின் வழக்கறிஞர்கள் நேரில் விளக்கம் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also see...
கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேரில் சென்று பார்த்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இது சமூக விரோதிகளால் நடைபெற்ற ஒரு சம்பவம் என்று தெரிவித்திருந்தார்.
அந்த கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அதன்பிறகு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை ஆணையம் மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் கருத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ரஜினிகாந்த்துக்கு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீங்கள் பேசியது குறித்து விளக்கம் தர வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.