தொழிலாளி கழுத்தில் சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு!

கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த புவனச்சந்திரன் என்ற தொழிலாளியின் கழுத்தில் மலைப்பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டது.

தொழிலாளி கழுத்தில் சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு!
கழுத்தில் சுற்றிய மலைப்பாம்பு
  • News18
  • Last Updated: October 16, 2019, 6:33 PM IST
  • Share this:
கன்னியாகுமரி அருகே நெய்யாறு பகுதியில் தொழிலாளி ஒருவரின் கழுத்தில் மலைப்பாம்பு சுற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மலைப்பாம்பு உடனடியாக அகற்றப்பட்டதால் தொழிலாளி உயிர் பிழைத்தார். நெய்யாறு அணை பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 20-க்கும் மேற்பட்டோர் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது,  கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த புவனச்சந்திரன் என்ற தொழிலாளியின் கழுத்தில் மலைப்பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டது. இதனால் அவர் அலறி துடித்த படி அங்கும் இங்கும் ஓடினார். இதை கவனித்த சக தொழிலாளர்கள், பாம்பை லாவகமாக அகற்றினர்.


இதை தொடர்ந்து அந்த  பாம்பை தொழிலாளர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Also see...

First published: October 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...