ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுக்கு உருமாறிய கொரொனா தாக்குமா? பொது சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்

ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுக்கு உருமாறிய கொரொனா தாக்குமா? பொது சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம்

கோப்புப் படம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருவாகும் எதிர்ப்பு சக்தி உடலில் இருப்பதால் அது உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுக்கு பிரிட்டன் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்க வாய்ப்பு மிக குறைவு என பொது சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்கலைகழக துணைதுணை வேந்தர் சுதா சேஷய்யன் தலைமையில்
எம் ஜி ஆர் மருத்துவ பல்கலையில் இன்று நடைபெற்றது. சென்னை மாவட்ட நல கல்வியாளர் மரிய அற்புத சாமி கொரோனா நோய் தடுப்பு முறைகள் குறித்து பல்கலைகழக ஊழியர்கள், ஆய்வாளர்களுக்கு விளக்கவுரையாற்றினார்.

கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது, அதை எப்படி தவிர்க்க வேண்டும், சிகிச்சை முறைகள் என்ன , எப்போது மருத்துவமனையை அணுக வேண்டும், குழந்தைகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பேசினார்.

Also read... கொரோனா வைரஸ் உருமாற்றம் குறித்து பதற்றம் வேண்டாம்: விஞ்ஞானிகள் அறிவுரை

அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஏற்கனவே கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை பிரிட்டன் உருமாறிய கொரோனா தாக்குவதற்கான வாய்ப்பு குறைவு என கூறினார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உருவாகும் எதிர்ப்பு சக்தி உடலில் இருப்பதால் அது உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் செயல்படும் என்றார். எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும் பட்சத்தில் தான் இரண்டாம் முறை கொரோனா வருவதற்கான வாய்ப்பு உண்டு என்றார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: