• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிறையை தகர்க்க ஐ.எஸ். அமைப்பினர் திட்டம்: சடலமாக மீட்கப்பட்ட கைதி!

சிறையை தகர்க்க ஐ.எஸ். அமைப்பினர் திட்டம்: சடலமாக மீட்கப்பட்ட கைதி!

சித்தரிப்புப் படம்

சித்தரிப்புப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    சிறையை தகர்த்து கைதியை கடத்த  போவதாக மத்திய உளவுத்துறைக்கு வந்த எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில், சிறைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கைதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    ஐ.எஸ்.-க்கு ஆதரவாக செயல்பட்டதாக சென்னையில் வசித்து வந்த கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டையை சேர்ந்த அன்சர் மீரான் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் கைதிகள் உல்லாச வாழ்க்கை வாழ்வதாக புகைப்படம் வெளியான பிறகு, அன்சர்மீரான் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

    இந்நிலையில் கடலூர் சிறையை தகர்த்து அன்சர் மீரானை ஐ.எஸ். அமைப்பினர் கடத்த இருப்பதாக மத்திய உளவுத்துறை போலீசார் தமிழக சிறைத்துறைக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் நேற்று மாலை கடலூர் மத்திய சிறைக்கு வந்து சிறை காவலர்களுடன் அதிரடி ஆய்வில் ஈடுபட்டார்.

    அதனையடுத்து, தீவிரவாதிகள் தொடர்புடைய கைதிகளை சிறைத் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் கிராமத்தைச் சேர்ந்த  மன்சூர் அலி, தூக்கிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ALSO WATCH...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: