சென்னையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் மெரினா கடல் பகுதியில் விழுந்து தற்கொலை செய்துள்ளார். கொண்டிருக்கிறார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று மாலை 7 மணி அளவில் அடையாளம் தெரியாத ஒரு நபரின் உடல் சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் எதிரே கரை ஒதுங்கியது. வழக்குப் பதிவு செய்த மெரினா காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இறந்தவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மல்லிகா அர்ஜூன் (35) என்பதும் அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் என்பதும் தெரியவந்தது.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் இவரது குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் இவர் கடந்த சில தினங்களாக மனம் உடைந்து காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் தனது காரில் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து கலங்கரை விளக்கம் அருகே காரை நிறுத்திவிட்டு இவர் கடலுக்குள் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இறப்பதற்கு முன் மெரினாவில் காரை நிறுத்திவிட்டு தனது சகோதரருக்கு வாட்ஸ்அப்பில் கார் லொகேஷனை அனுப்பிவிட்டு, எனது இந்த முடிவுக்கு யாரும் காரணமல்ல, அப்பா அம்மாவை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும் என மெசேஜ் செய்துள்ளார் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் மருத்துவரின் குடும்பத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.