ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே!’ அதிமுக அலுவலகத்துக்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

’பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே!’ அதிமுக அலுவலகத்துக்கு முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி போஸ்டர்

எடப்பாடி பழனிசாமி போஸ்டர்

ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டத்துவதற்கு முயற்சி நடைபெறுகிறது என்று கூறப்படும் நிலையில், இந்தப் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் கூட உள்ள நிலையில், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எதிரே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்துவதுடன், பொதுக்குழுவை கூட்டி அ.தி.மு.கவை வழிநடத்த ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒற்றைத் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என மதுரை வடக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேசினார்.

    அவரைத்தொடர்ந்து, பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ஜெயலலிதா யாரையும் அடையாளம் காட்டவில்லை என்றும் பொதுக்குழு தீர்மானத்தின்படியே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சியை வழிநடத்தி வருவதாகவும் அமைச்சர் சி.வி சண்முகம் விளக்கமளித்தார். சி.வி. சண்முகத்தின் கருத்தை மற்ற அமைச்சர்களும் ஆதரித்தனர். இவர்களுடைய பேச்சுகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில், இன்று அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு முன் ’அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வாருங்கள் எடப்பாடியாரே’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டத்துவதற்கு முயற்சி நடைபெறுகிறது என்று கூறப்படும் நிலையில், இந்தப் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK