"திருமண வரன்களை முடக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி"-முதியவரை வம்புக்கு இழுக்கும் போஸ்டரால் பரபரப்பு

Youtube Video

"வருகின்ற திருமண சம்பந்தங்களை முடக்குகின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருமணம் ஆகாத வாலிபர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்" என்ற போஸ்டரால் கன்னியாகுமரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 • Share this:
  கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே "திருமண சம்பந்தங்களை முடக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி" என்ற வாசகம் கொண்ட போஸ்டர்களை அப்பகுதி இளைஞர்கள் சிலர் ஒட்டி உள்ளனர். மாவட்டத்தில் மாப்பிள்ளை வீட்டார் பற்றி விசாரிக்க வரும் பெண் வீட்டாரிடம் சிலர், தவறான தகவல்களை கூறி திருமணத்தை தடுத்து நிறுத்துவதாக கூறப்படுகிறது.

  இந்தநிலையில் குளச்சல் அடுத்த அயினிவிளை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், பெஞ்சமின் என்ற பலசரக்கு வியாபாரியின் புகைப்படத்துடன் "திருமண சம்பந்தங்களை முடக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருமணம் ஆகாத வாலிபர்கள் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்" என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

  கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக இளைஞர்கள் வரன் பார்ப்பதும் வரன் சம்பந்தமாக பெண் வீட்டார் இளைஞர்களின் சொந்த ஊரில் விசாரிக்க செல்லும் போது டீக்கடை பெஞ்ச் ஆசாமிகள் புறம் பேசி வரன்களை தடுப்பதும் தொடர்கதை ஆகிவந்தது. இந்நிலையில் இளைஞர்களோ ’வரன்களைத் தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி.. இப்படிக்கு திருமணம் ஆகாத வாலிபர் சங்கம்’ என்றும் மொட்டையாக பேனர் வைப்பதும் போஸ்டர் ஒட்டுவதுமாக இருந்து வந்துள்ளனர்.

  இந்நிலையில் புது டிரெண்டிங்காக குளச்சல் அருகே அயினி விளை, பிச்சன் விளை, இளைஞர்கள் ஒருபடி மேலே சென்று அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் பெஞ்சமின் என்பவர் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உக்கார்ந்திருக்கும் போட்டோவை போஸ்டரில் போட்டு திருமணம் விலக்குவோர் சங்கத் தலைவர் என்றும் தொழில் திருமண வரன் தடுத்தல் என்றும் தொழில் பலசரக்கு வியாபாரம் என்றும் சுய விபர குறிப்போடு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

  Also Read : பிற மொழி தயாரிப்பாளர் படங்களில் ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள்!

  இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போஸ்டர் குறித்த செய்திகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வேகமாக பரவியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட முதியவர் பெஞ்சமின் பேசுகையில் தான் 50-வருடங்களுக்கு மேலாக இந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருவதாகவும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள் நோக்கத்தோடு சில இளைஞர் இந்த செயலை செய்துள்ளதாகவும் மன உளச்சலில் இருக்கும் தான் இதுகுறித்து கருங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்ததோடு மான நஷ்ட வழக்கும் தொடர போவதாகவும் கூறினார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: