• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய ஆதித்தமிழர் பேரவை பிரமுகர் கைது!

காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய ஆதித்தமிழர் பேரவை பிரமுகர் கைது!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

  • Share this:
    காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

    சேலத்தில் மது போதையில் காவல் துறை உதவி ஆய்வாளரைத் தாக்கிய வழக்கில் சேலம் ஆதித்தமிழர் பேரவையின் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சேலம், சோளம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்தமிழர் பேரவையின் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார். சனிக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது, சோளம்பள்ளம் பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்த செப்டிக் டேங்க் லாரியிலிருந்த கழிவுநீரை, சாலை ஓரத்தில் திறந்து விட்டுள்ளார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சேலம், சூரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் பாரதிராஜா சென்றுள்ளார். அவரைப் பார்த்து தப்பிச் செல்ல முயன்றபோது ஜெயக்குமார் கீழே விழுந்து மூக்கு உடைந்துள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் உதவி ஆய்வாளர் பாரதிராஜாவை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அவரைப் பிடித்த பாரதிராஜா, காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார். அங்கு சென்ற போலீசார், காயமடைந்த இருவரையும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இந்த தகவல் அறிந்து ஜெயக்குமாரின் உறவினர்கள் மற்றும் ஆதித் தமிழர் பேரவையைச் சேர்தவர்களும் மருத்துவமனையில் குவிந்ததால் சிறிதுநேரம் பதற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில், ஜெயக்குமாரை கைது செய்த சூரமங்கலம் போலீசார், அவர் மீது பணியிலிருந்த காவலரைத் தாக்கியது, பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயக்குமார் மீது ஏற்கெனவே சூரமங்கலம் காவல் நிலையத்தில் அடி தடி , கொலை முயற்சி என 9 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: