புழல் சிறைக் காவலர் அரிவாளால் வெட்டிக்கொலை

புழல் சிறைக் காவலர் அரிவாளால் வெட்டிக்கொலை

மாதிரிப்படம்

செங்கல்பட்டு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலரை, அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

 • Share this:
  செங்கல்பட்டு மாவட்டம் பழைய சீவரம் பகுதியைச் சேர்ந்த இன்பரசு (28) என்பவர் சென்னை புழல் சிறையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் ஊருக்குச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் பணிக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்த நபர்கள், செங்கல்பட்டு அருகே வாகனத்தை மறித்து இன்பரசை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  Also read: வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக நீதிமன்றத்தை நாடும் - மு.க. ஸ்டாலின்  இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆயுதப்படை காவலரை படுகொலை செய்த நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
  Published by:Rizwan
  First published: