கடலூர் மத்திய சிறைக் கைதிகளுக்கு கஞ்சா கொடுத்த சிறைக் காவலர் பணியிடை நீக்கம்

மாதிரிப் படம்

கடலூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு கஞ்சா வழங்கிய சிறைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
கடலூர் மத்திய சிறைச்சாலையில் சுமார் 300-க்கு மேற்பபட்ட கைதிகள் உள்ளனர். உள்ளே இருக்கும் கைதிகளிடம் இருந்து மாதம் தோறும் போலீசார் நடத்தும் சோதனையில் செல்போன், கஞ்சா, சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறை கைதிகளுக்கு கஞ்சா எப்படி உள்ளே வருகிறது என சிறைச்சாலையில் தீவிர ரகசிய கண்காணிப்பு நடைபெற்றுள்ளது.

இதில் சிறைக்காவலர் சுரேஷ்குமார் வெளியில் இருந்து கஞ்சாவை எடுத்து கொண்டு சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு கொடுக்க சிறைச்சாலையில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிய உள்ளார். இதனை பார்த்த ரகசிய குழுவினரிடம் கையும் களவுமாக சிறைக்காவலர் பிடிபட்டார்.

மேலும் வீசிய கஞ்சா பொட்டலங்களும் சிக்கியது. அதனைத் தொடர்நது சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா பொட்டலங்களை கொடுத்ததால் சிறைக்காவலர் சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்திரவிட்டார் கடலூர் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் நிக்கிலா நாகேந்திரன்.
Published by:Karthick S
First published: