• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இடிந்து விழும் அரசு தொகுப்பு வீடுகள்: அச்சத்தில் கிராம மக்கள்!

இடிந்து விழும் அரசு தொகுப்பு வீடுகள்: அச்சத்தில் கிராம மக்கள்!

மேற்கூரை இடிந்த நிலையில் தொகுப்பு வீடு

மேற்கூரை இடிந்த நிலையில் தொகுப்பு வீடு

இடிந்து விழும் தொகுப்பு வீட்டிற்கு பதில் மாற்று இடமாக சமுத்துவப்புரம் பகுதியில் உள்ள வீட்டை வழங்க அதிகாரிகளிடம் பல மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இடிந்து விழும் அரசு தொகுப்பு வீடுகள். இதனால் அச்சத்தில் இருக்கும் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் குடிசைகளே இருக்கக்கூடாது என்பதற்காக, கான்கிரீட் வீடுகளை கட்டித்தரும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சோலார் புத்தேரி கிராமத்தில், கடந்த கலைஞர் ஆட்சியின் போது 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இந்தத் தொகுப்பு வீடுகளில் சுமார் 500 பேர் குடியிருக்கிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் வீடுகள் முற்றிலும் சேதமடைந்து வருகிறது. மேலும் 2015-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பேரழிவை சந்தித்தது. இதனால் தொகுப்பு வீடுகள் முற்றிலும் சேதமடைந்து விரிசல் ஏற்ப்பட்டுள்ளன.

    மேற்கூரை இடிந்த நிலையில் தொகுப்பு வீடு


    தற்போது கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் வீடுகள் இடிந்து விழுந்து வருகிறது. நேற்று பெய்த மழையில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் நல்வாய்ப்பாக வீட்டில் இருந்த 3 குழந்தைகள் மற்றும் நான்கு பெரியவர்கள் உயிர் தப்பினர்.

    மேலும் இதே போல் ஒவ்வொரு வீடுகள் நாளுக்கு நாள் விழுந்து வருவதால் வீட்டில் உள்ள உபகரண பொருட்கள் மிக்ஸி பீரோ கட்டில் டிவி அனைத்தும் உடைந்து சேதமடைந்து வருகிறது என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இடிந்த நிலையில் தொகுப்பு வீடு


    தொகுப்பு வீடுகள் அடிக்கடி இடிந்து விழுவதால் மாற்று இடம் கேட்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பதால் கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    இதே ஊரில் சமத்துவபுரம் என்ற பெயரில் அரசாங்கம் நூறு வீடுகளை கட்டி இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. 3 ஆண்டுகளாக பாழடைந்து அந்த வீடுகள் சமுக விரோதிகளின் கூடாரமாக கிடக்கின்றன என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இடிந்த வீடுகளில் வசிக்கும் கிராம மக்கள்


    இடிந்து விழும் தொகுப்பு வீட்டிற்கு பதில் மாற்று இடமாக சமுத்துவப்புரம் பகுதியில் உள்ள வீட்டை வழங்க அதிகாரிகளிடம் பல மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே இதே தொகுப்பு வீட்டில் தங்கி வந்தால், எப்போது வேண்டுமானால் வீடு இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே ஆட்சியர் இந்த பிரச்னையில் தலையிட்டு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: