Home /News /tamil-nadu /

நகைக்கடன் தள்ளுபடி செய்த அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு வாபஸ்!

நகைக்கடன் தள்ளுபடி செய்த அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு வாபஸ்!

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், பயிர்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை வழங்கி 2021-22ஆம் ஆண்டில் நிதி பற்றாக்குறையுடன் உள்ள அரசு, நகைக்கடன் ரத்து செய்யும்போது பல்வேறு விதிமீறல்களை செய்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், கடந்த நவம்பர் 21ஆம் தேதி தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பிறப்பித்த உத்தரவில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகைக்கடன்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இந்த உத்தரவு பொது நலனுக்கு முரணாக அறிவிக்கப்படுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், பயிர்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை வழங்கி 2021-22ஆம் ஆண்டில் நிதி பற்றாக்குறையுடன் உள்ள அரசு, நகைக்கடன் ரத்து செய்யும்போது பல்வேறு விதிமீறல்களை செய்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நகைக்கடனுக்கான வட்டி மற்றும் அசலில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டிவருபவர்களுக்கு கடன் தள்ளுபடி சலுகை வழங்காமல், எந்த தொகையும் செலுத்தாதவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுக்குடும்ப நடைமுறையை சிதைக்கும் வகையில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான பயன்களை விவசாயிகளும், சுய உதவி குழுக்களும் பெறுவதற்கு வருமானம் மற்றும் பொருளாதார எல்லை ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளபோது, தற்போதைய நகைக்கடன் தள்ளுபடிக்கு அதுபோன்ற விதிகள் ஏதும் பின்பற்றப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே தமிழக அரசின் நகைக்கடை தள்ளுபடி உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

Also read... கோதாவரி-காவிரி இணைப்பு கனவாகவே நீடிக்க கூடாது - ராமதாஸ்!

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கடிதம் அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், வாபஸ் பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி