Home /News /tamil-nadu /

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு!

குருமூர்த்தி

குருமூர்த்தி

சென்னையில் கடந்த 14ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பலர் அரசியல்வாதிகளால் நியமிக்கபட்டவர்கள் என பேசியிருந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 14ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பலர் அரசியல்வாதிகளால் நியமிக்கபட்டவர்கள் என பேசியிருந்தார். மேலும், யார் மூலமாவது யார் காலையோ பிடித்து தான் நீதிபதிகளாக பதவி வந்ததாக குருமூர்த்தி பேசியது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முறையீடு செய்தார்.
முறையீட்டையேற்ற நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்யுமாறு அவருக்கு அறிவுறித்தினர்.

Also read... அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி...!

இந்நிலையில், குருமூர்த்தி மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கும் வகையில் குருமூர்த்தி பேசியுள்ளதால், உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், அரசு தலைமை வழக்கறிஞரின் பரிந்துரைக்கு காத்திருக்காமல் நீதிமன்றமே குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Auditor Gurumoorthy, Madras High court

அடுத்த செய்தி