தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதியின் பெயரை வைக்க கோரி மனு

தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதியின் பெயரை வைக்க கோரி மனு
மெட்ரோ
  • News18
  • Last Updated: September 11, 2020, 12:34 PM IST
  • Share this:
தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி 3 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களின் பெயர்களை சூட்டினார்.

அதன்படி, ஆலந்தூர் நிலையத்திற்கு "அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ" எனவும், சென்ட்ரல் நிலையத்திற்கு "புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மெட்ரோ ரயில் நிலையம்" எனவும், கோயம்பேடு நிலையத்திற்கு "புரட்சி தலைவி டாக்டர்.ஜெயலலிதா மெட்ரோ" ரயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டது.


சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.Also read... மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்கு 20% கட்டணச் சலுகை!

மெட்ரோ திட்டத்திற்கு காரணமாக இருந்த கருணாநிதியின் முயற்சியை வரலாற்றில் இருந்து மறைக்கவும், அரசியல் நோக்கத்துடனும் மற்ற தலைவர்களின் பெயர்கள் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வைக்கப்படுவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.எனவே, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ நிலையத்திற்கு "டாக்டர். கலைஞர் கருணாநிதி டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம்" என பெயரை வைக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading