20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி மனு...!

20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி மனு...!

சென்னை உயர்நீதிமன்றம்.

பாமக'வினரின் போராட்டத்தால் பொதுமக்களுக்கும் பொது சொத்துக்கும் பெரும் சேதம் ஏற்பட்டதால், மேற்கொண்டு போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரியும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் வாராகி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னையில் நேற்று அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாமகவைச் சேர்ந்த பலர் வாகனங்களில் சென்னைக்கு வந்த போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் திரும்பிச் செல்ல கூறினார்.

  இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்து, ரயில் மீது கற்களை வீசி பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தினர்.

  Also read... நீதிபதிகளை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் கைது  பாமக'வினரின் போராட்டத்தால் பொதுமக்களுக்கும் பொது சொத்துக்கும் பெரும் சேதம் ஏற்பட்டதால், மேற்கொண்டு போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரியும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: