திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு...!

திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு...!

சென்னை உயர்நீதிமன்றம்.

திரையரங்குகளின் இருக்கைகளுக்கு 50% மட்டுமே உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவையை சேர்ந்த வெங்கடேஷ் பழனிச்சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கொரனோ தடுப்பு விதிகளை மீறியும்,தனி மனித விலகலை முறையாக பின்பற்றாமலும்,முக கவசம் அணியாமலும், கிராம சபை கூட்டங்கள் நடத்தபடுவதாக தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரிடம் முறையான அனுமதி பெறாமலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் அருகில் கூட்டங்கள் நடத்தபடுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

Also read... அமித்ஷா வருகையின் போது விதிகளை மீறி பேனர் - நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி

இந்த கூட்டங்களில் மற்ற கட்சிகள் குறித்து பொதுமக்களிடம் தவறான கருத்துக்கள் பரப்பட்டுவருவதாக தெரிவித்த அவர், கோவையில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண் தாக்கபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல், பத்திரிக்கையாளர்கள் பேட்டியின் போது மூத்த ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திரையரங்குகளின் இருக்கைகளுக்கு 50% மட்டுமே உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: