தேசியக் கொடி அவமதிப்பு - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு

தேசிய கொடியை அவமதித்ததாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மீதான புகார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசியக் கொடி அவமதிப்பு - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு
எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்
  • News18
  • Last Updated: October 28, 2020, 5:30 PM IST
  • Share this:
சுதந்திர தினத்தன்று, தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் எல்.முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சி கொடி ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி அவமரியாதை செய்ததாக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன் மற்றும் இல.கணேசன் ஆகியோருக்கு எதிராக முகப்பேரை சேர்ந்த குகேஷ் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த 17ம் தேதி புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி குகேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Also read... கிராமசபை கூட்டங்களை நடத்தக் கோரிக்கை.. பொதுநல மனுவாக தாக்கல் செய்யுமாறு மக்கள் நீதி மய்யத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்அதில், பாஜக கட்சி கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றியது தேசிய கொடி விதிகள் மற்றும் தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றம் என்பதால் எல்.முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading