நேரடியாகவும் பத்திரப்பதிவு செய்ய அனுமதி கோரி மனு! விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்

நேரடியாகவும் பத்திரப்பதிவு செய்ய அனுமதி கோரி மனு! விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
  • News18
  • Last Updated: November 19, 2019, 6:39 PM IST
  • Share this:
ஆன்லைன் மூலமாக மட்டுமே அல்லாமல் நேரடியாகவும் பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க பத்திரப்பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பத்திரப்பதிவுத்துறை, கடந்த 2018 பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே பத்திரப்பதிவு நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கோவையைச் சேர்ந்த எம். சின்னராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.


அந்த மனுவில், ஆன்லைன் பத்திரப்பதிவு செய்வதற்கான போதுமான மென்பொருள்கள் பத்திரப்பதிவுதுறையிடம் இல்லை என்றும் பத்திரப்பதிவு துறை ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆன்லைன் பத்திரப்பதிவில் ஆவணங்களை பாதுகாக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் மதிப்புமிக்க ஆவணங்கள் தவறாக கையாளப்பட வாய்ப்பு உள்ளது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஆன் லைன் பத்திரபதிவில் பல்வேறு பிரச்சனை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை மேம்படுத்தும் வரை நேரடியாக பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

Loading...

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது . வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து பத்திரப்பதிவுத்துறை இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

Also see...
First published: November 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com