Home /News /tamil-nadu /

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு...!

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு...!

பேரறிவாளன்.

பேரறிவாளன்.

பேரறிவாளனின் பரோல் காலம் வரும் 9 ஆம் தேதியோடு முடிவடைவதால், மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு கேட்டு அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

  • News18
  • Last Updated :
ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, பரோல் மனுவை ஏற்கனவே நிராகரித்துவிட்டதாக தமிழக அரசும், சிறைத்துறையும் தெரிவித்தன.

அற்புதம்மாள் தரப்பில், விடுதலை செய்ய முடிவெடுத்த அரசு, பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், விடுதலை செய்ய முடிவெடுத்ததும், விடுப்பு மறுப்பதும் ஒரே கட்சியின் தலைமையிலான அரசுதான் எனவும் வாதிடப்பட்டது.

Also read... இட ஒதுக்கீடு போலவே ஏழு பேர் விடுதலையிலும் மகிழ்வானது நடக்கும்... அமைச்சர் உதயக்குமார்!



இதையடுத்து, அமைச்சரவை மாறியிருந்தாலும், முடிவெடுத்த அரசுகள் ஒன்றுதான் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் காலம் வரும் 9 ஆம் தேதியோடு முடிவடைவதால், மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு கேட்டு அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர வேண்டியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Perarivalan

அடுத்த செய்தி