• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சார்பட்டா பரம்பரை படத்தில் எம்ஜிஆர் பற்றி தவறாக சித்தரிப்பு - பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு

சார்பட்டா பரம்பரை படத்தில் எம்ஜிஆர் பற்றி தவறாக சித்தரிப்பு - பா.ரஞ்சித் வீட்டு முன்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு

பா.ரஞ்சித்

பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    எம்ஜிஆர் குறித்து சார்பட்டா பரம்பரை படத்தில் தவறாக சித்தரித்ததாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தைக் கண்டித்து அவரது வீட்டின் முன்பு தர்ணா போராட்டம் நடத்த அனுமதிகோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா, கலையரசன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான சார்பட்டா திரைப்படம் கடந்த வாரம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சென்னை சென்ட்ரலை ஒட்டிய வடசென்னைப் பகுதியில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டையைக் கதைக் களமாக கொண்டு அந்தப் படம் உருவாகியிருந்தது. இந்தியாவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டது. அதில், எம்.ஜி.ஆர், கருணாநிதி குறித்த காட்சியமைப்புகள் இடம்பெற்றிருந்தன.

    இந்தநிலையில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் விஸ்வநாதன் என்பவர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

    அதில், சமீபத்தில் வெளியான “சார்பட்டா பரம்பரை" திரைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து தவறாக விமர்ச்சிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான விமர்சனம் “எம்.ஜி.ஆர்" ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Also read... பிக்பாஸ் ஜோடிகள்: ரம்யா கிருஷ்ணனுடன் மோதல் ஏன்? வனிதாவின் சரவெடி பதில்!

    “எம்.ஜி.ஆர்" அவர்களை பற்றி தவறான விமர்சனத்தை “சார்பட்டா” படத்தில் புகுத்தியுள்ள “சார்பட்டா" பட இயக்குனர் ரஞ்சித்தை கண்டித்து அவருடைய இல்லத்தின் முன்பு தர்ணா போராட்டம், 29.07.2021-அன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடத்த உள்ளேன். இதற்கு அனுமதி கேட்டு உள்ளேன்" என்று மனுவில் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: