+2 கூட தேர்ச்சி பெறாமல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் - அதிர்ச்சி தகவல்

அண்ணாமலை பல்கலைக்கழகம்

நிர்வாக குளறுபடிகளால் தடுமாறிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தை, 2013ஆம் ஆண்டு முதல் அரசு எடுத்து நடத்தி வருகிறது.

 • Share this:
  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பல பேராசிரியர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என பல புகார்கள் எழுந்த வண்ணம் இருக்க, +2 வில் தேர்ச்சி கூட பெறாத ஒருவர், உதவி பேராசிரியராக பணியாற்றியததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  நிர்வாக குளறுபடிகளால் தடுமாறிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தை, 2013ஆம் ஆண்டு முதல் அரசு எடுத்து நடத்தி வருகிறது. தேவையை விட பல மடங்கு அதிகமாக பணியாளர்களை நியமித்தது, இந்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்று.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இப்படி கூடுதலாக நியமிக்கப்பட்ட பணியாளர்களை, வேறு கல்லூரிகளுக்கு பணி நிரவல் செய்யும் பணியை உயர்கல்வித் துறை 2013ஆம் ஆண்டு முதலே செய்து வருகிறது. அப்படி, கடலூரில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரிக்கு பணி நிரவல் செய்யப்பட்ட இரண்டு பேராசிரியர்களின் கல்வித் தகுதி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  அரசியல் அறிவியல் துறையிலிருந்து பணி நிரவல் மூலம் கடலூர் பெரியார் கல்லூரிக்குச் சென்ற சுசித்ர வர்மா என்ற உதவி பேராசிரியரின் சான்றிதழ்களை சரிபார்த்தபோது, அவர் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், உதவி பேராசிரியருக்கான அடிப்படை தகுதியான பி.எச்டி அல்லது NET அல்லது SLET ஆகியவற்றில் எந்த தகுதியையும் பெற்றிருக்கவில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.

  அதேபோல், சரவணகுமார் என்ற மற்றொரு உதவி பேராசிரியரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபோது, அவர் 2003ஆம் ஆண்டு மே மாதத்தில் இளநிலை பட்டம் முடித்ததாகவும், 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முதுநிலை பட்டம் பெற்றதாகவும் சான்றிதழ்களை வழங்கி இருக்கிறார். அதாவது இரண்டு பட்டங்களுக்கும் இடையில் 18 மாதங்கள் மட்டுமே இடைவெளி இருந்திருக்கிறது. இவர்கள் இருவரும் கடலூர் பெரியார் கல்லூரியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு, மீண்டும் அண்ணாமலை பல்கலையிலேயே பணியாற்றி வருகின்றனர்.

  Read More : ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கப்படும்: அமைச்சர் பொன்முடி

  இப்படி இந்த 2 பேர் மட்டுமல்ல, பலர் முறைகேடாக சேர்ந்திருக்கிறார்கள் என்றக் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 860 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 ஆயிரத்து 896 பேர் பணியமர்த்தப் பட்டிருக்கிறார்கள்.

  Must Read : மதுகுடிக்க மனைவி பணம் தராததால் குழந்தைகளுடன் சொந்த வீட்டுக்கே தீ வைத்த இளைஞர்!

  ஆசிரியர் அல்லாத 1,110 பணியிடங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், 9 ஆயிரத்து 434 பேர் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.  இவ்வளவு பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டிருப்பதால், 2016ஆம் ஆண்டு முதல் கலை அறிவியல் கல்லூரிகளில் புதிதாக உருவாகும் பணியிடங்களை இந்தக் கூடுதல் பணியாளர்களைக் கொண்டே நிரப்பி வருகிறது தமிழக அரசு. இதனால், புதிதாக பணி வாய்ப்பு உருவாகும் எனக் காத்திருப்பவர்கள மற்றும் நிரந்தரமாவோமா எனக் காத்திருக்கும் கவுரவ விரிவுரையாளர்களின் காத்திருப்புக் காலம் நீண்டுகொண்டே இருக்கிறது.
  Published by:Suresh V
  First published: