மதுரையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நபர் ஒருவருக்கு டெல்டா வகை பாதிப்பு இருந்தது கண்டுபிடிப்பு!

டெல்டா வகை கொரோனா குறித்த ஆய்வுக்காக மதுரை மாவட்டம் முழுவதும் இருந்து 20 நபரின் மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

டெல்டா வகை கொரோனா குறித்த ஆய்வுக்காக மதுரை மாவட்டம் முழுவதும் இருந்து 20 நபரின் மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

  • Share this:
மதுரை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட 20 நபரின் மாதிரிகளில் ஒரு நபருக்கு மட்டும் டெல்டா வகை கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து அவரது தொடர்பில் இருந்தோரின் மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளன.

மதுரையை சேர்ந்த 34 வயது ஆணுக்கு கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஏற்பட்ட சளி, இருமல், காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட அறிகுறிகள் காரணமாக ஏப்ரல் 21 ஆம் தேதி வேலம்மாள் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்றைய தினமே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் அவருக்கான தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், சுவாசம் செயலிழந்து ஏப்ரல் 26 ஆம் தேதி அவர் உயிரிழந்து உள்ளார்.

அதன் பின்னர், டெல்டா வகை கொரோனா குறித்த ஆய்வுக்காக மதுரை மாவட்டம் முழுவதும் இருந்து 20 நபரின் மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அந்த முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அந்த 34 வயது ஆணுக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவரது தொடர்பில் இருந்த நபர்களின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Published by:Esakki Raja
First published: