சாலையில் நடைப்பயணமாக சென்ற அமித்ஷா மீது பதாகையை வீச முயற்சி
சென்னையில் சாலையில் நடைப்பயணமாக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது கூடியிருந்த மக்களில் ஒருவர் பதாகையை வீச முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமித்ஷா
- News18 Tamil
- Last Updated: November 21, 2020, 5:51 PM IST
தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அமித்ஷா இன்று காலை 10.50 மணிக்கு டெல்லியிலிருந்து தனிவிமானத்தில் சென்னை புறப்பட்டார்.ர் மதியம் 2 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார். தமிழகம் வந்த அமித்ஷாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று வரவேற்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, மாஃபா பாண்டியராஜன், தங்கமணி, சிவி சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
விமானநிலையத்திலிருந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டல் சென்றார். அப்போது வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். சாலையோரம் இருந்த பாஜக தொண்டர்களை பார்த்த அமித்ஷா காரிலிருந்து இறங்கினார்.
பின் தொண்டர்களை நோக்கி கை அசைத்தவாறு சாலையில் நடந்து சென்று அவர்களை உற்சாகப்படுத்தினார்.
அவர் சாலையில் நடந்து செல்லும்போது, கூடியிருந்த மக்களில் ஒருவர் அமித்ஷா மீது பதாகையை வீச முயற்சி செய்தார். அதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினர். அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அமித்ஷா மீது பதாகையை வீச முயற்சி செய்தவர், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 60 வயது முதியவர் துரைராஜ் என்பது தெரியவந்தார். அதனால், பரபரப்பு ஏற்பட்டது.

It is always great to be in Tamil Nadu. Thank you Chennai for this love and support. https://t.co/pxl5EaZ6on
— Amit Shah (@AmitShah) November 21, 2020