பள்ளி மாணவியிடம் முகநூல் மூலமாக பழகி, கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் போக்ஸோவில் கைது..

பள்ளி மாணவியிடம் முகநூல் மூலமாக பழகி, கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர் போக்ஸோவில் கைது..

மாதிரி படம்

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை முகநூல் மூலமாக பழகி ஆசை வார்த்தைகளை கூறி அழைத்துச் சென்ற நபர் போக்ஸோ சட்டத்தின்கீழ் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 • Share this:
  சென்னை கொளத்தூர் சேர்ந்த பெண் இவர் சில கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் துப்புரவு பணியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் இவருடைய மகள் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர். வீடு திரும்பாத நிலையில் அந்தப் பெண்ணின் தாயார் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவருடைய மகள் காணவில்லை என்று புகார் அளித்திருந்தார்.

  இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிரமாக மாணவியை குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் முகநூல் மூலமாக ஒருவர் அந்தப் மாணவியுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த காவல் துறையினர் அந்த மாணவி இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர்.

  அதன்பிறகு வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து புகைப்படத்தில் உள்ள நபர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த விமல் ராஜ் என்று தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தனிப்படை மகளிர் காவல் துறையினர் சேலத்திற்கு சென்று மாணவியை மீட்டனர்.  பின்னர் அந்த மாணவியை அழைத்துச் சென்ற நபரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

  மேலும் படிக்க...சித்ராவின் கணவர் ஹேம்நாத் போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்கு சென்றார்...

  அந்த இளைஞரை விசாரணை மேற்கொண்டதில் மாணவியிடம் முகநூல் மூலமாக பழகி ஆசை வார்த்தைகள் கூறி சேலத்திற்கு கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. இதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விமல்ராஜை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: