ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரூ.1-க்கு புரோட்டா, ரூ.10க்கு பிரியாணி... கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு

ரூ.1-க்கு புரோட்டா, ரூ.10க்கு பிரியாணி... கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு

ரூ.1-க்கு புரோட்டா, ரூ.10க்கு பிரியாணி...

ரூ.1-க்கு புரோட்டா, ரூ.10க்கு பிரியாணி...

சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் மற்றும் முதியவர்கள் என ஏராளமானோர் வரிசையில் குவிந்தனர். அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் மக்கள் குவிய தொடங்கினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பெரியகுளத்தில் ஒரு ரூபாய்க்கு புரோட்டாவும், 10 ரூபாய்க்கு பிரியாணியும் கொடுத்ததால் அதனை வாங்க ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர். 

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் உணவகத்தில் புரோட்டா முதல் பிரியாணி வரை அனைத்துப் பொருட்களுக்கும் அதிரடி விலை குறைப்பை  அறிவித்தனர்.

அதன்படி, ரூ. 10 விலையுள்ள ஒரு புரோட்டா  ரூ. 1-க்கும், ரூ.100 விலையுள்ள பிரியாணி ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அங்கு பொதுமக்கள் குவிந்தனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் மற்றும் முதியவர்கள் என ஏராளமானோர் வரிசையில் குவிந்தனர். அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் மக்கள் குவிய தொடங்கினர்.

இதையடுத்து காவல்துறையினர் அங்கு வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.

Also Watch: நவபாஷாண சிலை உண்மையா? பழநியில் எழுந்த புதிய சர்ச்சை

Published by:Anand Kumar
First published:

Tags: Biriyani, Parotta, Theni