தஞ்சை களிமேடு தேர் விபத்து தொடர்பாக காரணங்களை கண்டறிய வருவாய் துறை முதன்மை செயலர் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில், தஞ்சை மாவட்டம் களிமேடு தேர் விபத்து குறித்து கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற நிகழ்வில், கிராமத்தில் கடைசிப் பகுதிக்கு தேர் வந்தபோது, தேரின் உச்சிப்பகுதி 33KV உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. அப்போது மின் இணைப்பு நின்றது
ஆனால் தேரின் பின்பாக இணைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் தொடர்ந்து இயங்கி, அதிலிருந்து மின்சாரம் இரும்புச் சட்டங்களுக்கும், சீரியல் விளக்குகளுக்கு சென்றதால், தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க அப்பகுதி மக்கள் தேரின்மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முற்பட்டுள்ளனர். 0.19 வினாடிக்குள் எதிர் பாராமல் நிகழ்ந்துவிட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
Also Read : தாயை விட்டு பிரிய மனமில்லாத பச்சிளம் குழந்தை - திருவள்ளூர் அரசு மருத்துவர்களை ஆச்சரியப்படுத்திய சம்பவம்
தேரின் உச்சிப்பகுதி மடக்கி செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்த போதிலும், விபத்து நடந்த பகுதிக்கு தேர் பகுதிக்கு வந்தபோது உச்சிப்பகுதியை மடக்கப்படவில்லை. மடக்கியிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது. விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகவும், விபத்திற்கான காரணங்களையும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான பரிந்துரைகளையும் இந்த குழு அரசுக்கு அளிக்குமென மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car Festival, MK Stalin, Senthil Balaji, Tanjore, TN Assembly