• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருமண விழாவில் கஜா புயல் நிவாரண வசூல் செய்த புதுமணத் தம்பதி!

திருமண விழாவில் கஜா புயல் நிவாரண வசூல் செய்த புதுமணத் தம்பதி!

நிதி வசூல் செய்த  தினேஷ்குமார்- திவ்யா தம்பதி

நிதி வசூல் செய்த தினேஷ்குமார்- திவ்யா தம்பதி

திருமணத்தின் போது புயிலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வசூல் செய்த தம்பதியினரை திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் பாராட்டி வாழ்த்தி சென்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தங்களது திருமணத்தின் போது புதுமண தம்பதிகள்  நிதி வசூல் செய்து நெகிழ வைத்துள்ளனர்.

கஜா புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவடங்களில் உள்ள மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வந்தாலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் மக்களும் உதவி வருகின்றனர்.

மேலும் கடலூர் மாவட்டத்தில் இருந்து கடலூர் சிறகுகள் மற்றும் நம்ம கடலூர் அமைப்பை சேர்ந்தவர்கள் மாவட்டத்தில் பலரிடம் இருந்து உதவிகள் மூலம் சேகரிக்கப்பட்ட பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வழங்கி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை கடலூர் சேர்ந்த கம்மியபேட்டை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் தனது திருமணத்தின் போது கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி வசூல் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை நண்பர்கள் மூலம் செய்தார்.

திருமணத்தில் நிதி வசூல் செய்த தம்பதிகள்


இதனை தொடர்ந்து இன்று காலை கடலூர் வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தினேஷ்குமார்- திவ்யா தம்பதியினர் அவர்களுடைய திருமணத்தில் கலந்துகொண்டவர்களிடம் கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களுக்காக நிதி வசூல் செய்தனர்.

நிதி வசூல் செய்த தினேஷ்குமார்- திவ்யா தம்பதி


திருமணத்தில் வருகை புரிந்த உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் நிதி அளித்தனர். மேலும் திருமணம் முடிந்ததும் நிதியுதவி செலுத்திய அனைருக்கும் புதுமண தம்பதிகள் நன்றி கூறினர்.

திருமணத்தின் போது புயிலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வசூல் செய்த தம்பதியினரை திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் பாராட்டி வாழ்த்தி சென்றனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: