சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு பூத் சிலிப் வராததால் வாக்களிப்பதில் சிக்கல்!

இணையம் மூலம் வாக்காளர் எண் கிடைக்கப் பெற்றவர்கள், அதனை காண்பித்தும், அல்லது ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உட்பட 10 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

news18
Updated: April 15, 2019, 3:49 PM IST
சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு பூத் சிலிப் வராததால் வாக்களிப்பதில் சிக்கல்!
கோப்புப் படம்
news18
Updated: April 15, 2019, 3:49 PM IST
தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பித்த முதல் வாக்காளர்கள் மற்றும் திருத்தம் செய்தவர்கள் பலருக்கு இன்னும் பூத் சிலிப் வராததால், அவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த முகாம்களில் பங்கேற்ற முதல்முறை வாக்காளர்கள் வாக்காள அட்டை கேட்டும், பலர் பெயர், முகவரி என திருத்தம் செய்தும் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களில் ஒருசிலருக்கு மட்டுமே வாக்காளர் அட்டை கிடைக்கப்பெற்ற நிலையில், பெரும்பாலானோருக்கு இன்னும் வாக்காளர் அட்டை மற்றும் பூத்சிலிப் கூட கிடைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் மண்டல அலுவலகங்களை நோக்கி படையெடுத்துள்ளனர்.

இணையம் மூலம் வாக்காளர் எண் கிடைக்கப் பெற்றவர்கள், அதனை காண்பித்தும், அல்லது ஆதார், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உட்பட 10 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், சிலருக்கு வாக்காளர் எண்ணும் கிடைக்காததால், அவர்களின் வாக்களிக்கும் உரிமை கேள்விக்குறியாகியுள்ளது.

Also see...
Loading...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...