ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

Weather Update | இதன் தாக்கத்தால் வருகிற 20-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 22ஆம் தேதி காலையில் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை வருகிற 20-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே இந்திய வானிலை மையம் தெரிவித்து இருந்த நிலையில், மத்தியமேற்கு வங்க கடல் பகுதியில் புயல் சின்னமாக மேலும் வலுபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புயல் சின்னம் ஏற்படும் பட்சத்தில் அது ஆந்திரா, ஒடிசா நோக்கி நகர்ந்து நல்ல மழையை பெய்யும் என்றும், இதனால், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் வருகிற 20-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Anupriyam K
First published:

Tags: Bay of Bengal, Cyclone, Indian Meteorological Center, Strom