Home /News /tamil-nadu /

எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்...! ஒரே நாடு ஒரே ரேஷன் நாளை முதல் அமல்

எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம்...! ஒரே நாடு ஒரே ரேஷன் நாளை முதல் அமல்

ரேஷன் கடை (கோப்புப் படம்)

ரேஷன் கடை (கோப்புப் படம்)

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டை மூலம் எந்த நியாயவிலைக் கடையிலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் திட்டம் நாளை அமலுக்கு வருகிறது.

    தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நியாயவிலைக் கடையில் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். தற்போது மாநிலத்தின் எந்த பகுதியிலும் உள்ள நியாயவிலைக் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில் புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டம் முதற்கட்டமாக சோதனை முறையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சனிக்கிழமை அமலுக்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

    வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் உதவியாக அமையும். மின்னணு குடும்ப அட்டை இல்லாதவர்கள் தங்களது ஆதார் எண், பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச் சொல் ஆகியவற்றை பயன்படுத்தி ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

    இதனால் நியாயவிலைக் கடையில் திடீரென தேவை அதிகரிக்கும் என்பதால் அத்தியாவசியப் பொருட்கள் 5 விழுக்காடு அளவுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும். பொருட்கள் இருப்பு இல்லை என கூறி தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களை திருப்பி விடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில் மேலாண் இயக்குநர் மூலம் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இத்திட்டம் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்த பின், வேறு மாநிலத்தவர்களும் தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Ration card

    அடுத்த செய்தி