உலகம் எல்லாருக்குமானது - சிவகங்கையில் திருமண மறுவீட்டுக்கு மீன்பாடி வண்டியில் சென்ற தம்பதி

உலகம் எல்லாருக்குமானது - சிவகங்கையில் திருமண மறுவீட்டுக்கு மீன்பாடி வண்டியில் சென்ற தம்பதி

புது திருமண தம்பதி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பொண்ணு மாப்பிளை மறு வீடு பயனத்திற்க்கு மீன்பாடி வண்டியில் பயணம் செய்தது ஆடம்பராத்துடன் வாழுபவர்களுக்கு எடுத்து காட்டாக அமைந்துள்ளது.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியப்பன் நகரில் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கழைக் கூத்தாடுவது, சர்க்கஸ் செய்வது இவர்களின் பிராதன தொழிலாக இருந்துவருகிறது. மானாமதுரை பகுதியில் உள்ள கங்கை அம்மன் குடியிருப்பு, மாரியம்மன் நகர், சன்னதி புதுக்குளம் பகுதியில் பெரும்பாலான கழைக் கூத்தாடிகள் வசித்து வருகின்றனர். சன்னதிபுதுகுளத்தை சேர்ந்த சுப்பையா மகளான அம்சவல்லி என்பவருக்கும், மாரியப்பன் நகரை சேர்ந்த கணேஷ் என்பவருடைய மகனாகிய விஜய்க்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

  திருமணம் முடிந்ததும் இன்று மறுவீடு பயணமாக பொன்னு வீடான சன்னாதி புதுகுளத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டான மாரியம்மன் நகருக்கு மீன்பாடி வண்டியில் 10 கிலோமீட்டர் தூரம் சென்றனர். பின்பு கோவிலில் சாமி கூம்பிட்டுவிட்டு பெரியோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி மீண்டும் பொண்ணு வீடான சன்னதி புதுகுளத்திற்க்கு மீன்பாடி வண்டியில் சென்றனர்.

  இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டர் இராமு கூறும்போது, ‘பெண் வீட்டில் வரதட்சணை என்பது கிடையாது. நாங்கள் யாரும் வாங்க
  மாட்டோம். சர்க்கஸ் வருமானம் மட்டுமே. பெண்ணுக்கு எங்களால் முடிந்த நகைகளை போட்டு நாங்கள் திருமணம் செய்து கூட்டி வருவோம். ஒரு காலத்தில் மாட்டுவண்டியில் அழைத்து சென்ற காலம் போய் தற்போது நவீன காலத்தில் குதிரை வண்டியிலும், கார்களிலும் அழைத்து செல்வது வழக்கம். எங்கள் வசதிக்கு ஏற்ப மீன்பாடி வண்டியில் அழைத்து வருவோம். இருப்பதே வைத்து மகிழ்ச்சி அடைகின்றோம் என்றார்.

  இதுகுறித்து மாப்பிள்ளை விஜய் கூறும்போது, ‘இந்த வண்டியில் வருவது தான் மகிழ்ச்சி என்றாலும் ஒரு காலத்தில் மாட்டு வண்டியில் கையில் இழுத்து செல்லுவோம். ஆனால் தற்போது காலம் மாறியதால் நாங்கள் தொழிலுக்கு பயன்படுத்தும் மீன்பாடி வண்டியில் ஊர்வலமாக வருகிறோம். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

  செய்தியாளர்: சிதம்பரம், சிவகங்கை


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: