தொடர்ச்சியாக பதிவெண் கொண்ட 100 பேர் தேர்ச்சி: உதவி காவல் ஆய்வாளர் தேர்விலும் முறைகேடா? புதிய சர்ச்சை!

தொடர்ச்சியாக பதிவெண் கொண்ட 100 பேர் தேர்ச்சி: உதவி காவல் ஆய்வாளர் தேர்விலும் முறைகேடா? புதிய சர்ச்சை!
உதவி ஆய்வாளர் தேர்வு (கோப்புப் படம்)
  • Share this:
வேலூர் மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளர் தேர்வெழுதியவர்களுள் அடுத்தடுத்த பதிவெண் கொண்ட 100 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

ஜனவரி 12-ம் தேதி 969 உதவி காவல் ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் தேர்வாணையம் தேர்வினை நடத்தியது. 1,34,000 தேர்வர்கள் இத்தேர்வினை எழுதினர்.

இத்தேர்வில் வேலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் அடுத்தடுத்து பதிவு எண் கொண்ட 100 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல்  தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத் தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய அடுத்தடுத்த பதிவெண் கொண்ட நபர்களும் தேர்ச்சி அடைந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதே போன்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 2-ம் நிலை காவலர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைப்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்விலும்  அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்திலிருந்து மட்டும் 1,119 பேர் தேர்வில் வெற்றி பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.2-ம் நிலை காவலர் தேர்வில் முறைகேடு புகார் எழுந்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பணி நியமணத்திற்கு தனி நீதிபதி விதித்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading