ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி : தமிழகத்திற்கு மீண்டும் மழை

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி : தமிழகத்திற்கு மீண்டும் மழை

மழை

மழை

நாளை முதல்19-ம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக டெல்டா மாவட்டங்கள், காரைக்கால், புதுக்கோட்டையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். இன்று முதல் 19-ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு பகுதிகளுக்கு4 நாட்களுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

Must Read : தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு

இதனால் நாளை முதல்19-ம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (டிசம்பர் 16 2021)

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க ஒப்புதல்

Paytm யூசர்கள் கவனத்திற்கு.. கோவிட் தடுப்பூசி போட்ட சர்டிபிகேட் பற்றிய முக்கிய அப்டேட்

First published:

Tags: Rain Forecast, Weather News in Tamil