சென்னைக்கு கொண்டுவரப்பட்டது ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை!

அனைத்து துறைகளின் கூட்டு முயற்சியின் மூலம் சிலை மீட்கப்பட்டுள்ளதாகவும், 2 ஆண்டுகள் இதற்காக சட்டப்போராட்டம் நடத்தப்பட்டதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.

news18
Updated: September 13, 2019, 6:06 PM IST
சென்னைக்கு கொண்டுவரப்பட்டது ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை!
நடராஜர் சிலை
news18
Updated: September 13, 2019, 6:06 PM IST
37 ஆண்டுகளுக்கு முன்னர் நெல்லையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு சென்னை வந்தடைந்தது. மேளதாளங்கள் முழங்க நடராஜர் சிலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான குலசேகரமுடையார் கோவிலில் நடராஜர் சிலை இருந்தது.

இந்த சிலை 1982-ம் ஆண்டு காணாமல் போன நிலையில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில், தனியார் அருங்காட்சியகத்தில்  இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலமாக நடராஜர் சிலை டெல்லி கொண்டுவரப்பட்டது.

அங்கிருந்து ரயில் மூலமாக சிலை இன்று சென்னை வந்தடைந்தது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் டெல்லியில் இருந்து சென்னைக்கு சிலையை கொண்டு வந்தனர். நடராஜர் சிலைக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பொதுமக்கள் பார்வைக்காக சிறிதுநேரம் ரயில்நிலையத்திலேயே சிலை வைக்கப்பட்டது. நடராஜர் சிலைக்கு அங்கேயே சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

Loading...

அனைத்து துறைகளின் கூட்டு முயற்சியின் மூலம் சிலை மீட்கப்பட்டுள்ளதாகவும், 2 ஆண்டுகள் இதற்காக சட்டப்போராட்டம் நடத்தப்பட்டதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.

இந்த சிலையுடன் சில தூண்களும் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளதாகவும், அதனையும் மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் உள்ள சிலைகள் குறித்து முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதப்பட்டதாகவும் ஆனால் அவரிடம் இருந்து பதில் வரவில்லை எனவும் பொன் மாணிக்கவேல் குற்றம்சாட்டினார்.

Also see...
First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...