Home /News /tamil-nadu /

வீட்டை காலி செய்ய கூறியதால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய் - சிவகங்கையில் சோகம்

வீட்டை காலி செய்ய கூறியதால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய் - சிவகங்கையில் சோகம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்தநிலையில் நேற்று காளிஸ்வரி மற்றும் அவரது பிள்ளைகள் அபிஷேக், மங்கையர்கரசி ஆகியோர் வீட்டில் சடலமாக இருந்தனர்.

    சிவகங்கையில் வீட்டைக் காலி செய்ய கூறியதால் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

    சிவகங்கை மாவட்டம் அதப்படக்கி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காளிஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் சிவகங்கை குறிஞ்சி நகரில் மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டை லீசுக்கு எடுத்து வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று காளிஸ்வரி மற்றும் அவரது பிள்ளைகள் அபிஷேக், மங்கையர்கரசி ஆகியோர் வீட்டில் சடலமாக இருந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Also read... கொந்தகை அகழாய்வு - மீண்டும் கிடைத்த இரண்டு குழந்தைகளின் முழு எலும்புக் கூடுகள்

    அப்போது வீட்டின் சுவற்றில் தனது மரணத்திற்கு வீட்டின் உரிமையாளர் தான் காரணம் என காளிஸ்வரி எழுதியிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

    மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Vinothini Aandisamy
    First published:

    அடுத்த செய்தி