கடன் தொல்லை, மாமியார் கொடுமை: 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை

கடன் தொல்லை மற்றும் மாமியார் கொடுமை காரணமாக தன் 3 பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.

கடன் தொல்லை, மாமியார் கொடுமை: 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை
கோப்புப் படம்
  • Share this:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடன் தொல்லை மற்றும் வீட்டை காலி செய்யச் சொல்லி மாமியார் வற்புறுத்தியதால் மூன்று குழந்தைகளுடன் விஷமருந்திய தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிதம்பரநாதபுரத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் தனது வளர்ப்பு தாய் வசந்தா வீட்டில் மனைவி பிரியதர்சினி மற்றும் மகள், இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் ராமதாஸ் உயிரிழந்த நிலையில், அவர் வாங்கிய கடன் தொகையை பலரும் பிரியதர்சினியிடம் கேட்டு வந்துள்ளனர். மேலும் மாமியார் வசந்தாவும், வீட்டை காலி செய்யுமாறு அவரை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

Also read: மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினர் போக்சோ சட்டத்தில் கைது


இந்நிலையில், நேற்று வசந்தாவும் அவரது தம்பி ராஜேந்திரனும், பிரியதர்சினியையும், அவரது 16 வயது மகள் பர்வதவர்த்தினியையும் தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த தாய், மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தியுள்ளார். இதில் தாய் பிரியதர்சினி உயிரிழந்த நிலையில், மூன்று பிள்ளைகளும் கவலைக்கிடமான நிலையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




 
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading