தாய்- தந்தை கொரோனாவால் உயிரிழப்பு... தவிக்கும் மூளை வளர்ச்சி குன்றிய மகன்

தாய், தந்தை கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மூளை வளர்ச்சி குன்றிய மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாய்- தந்தை கொரோனாவால் உயிரிழப்பு... தவிக்கும் மூளை வளர்ச்சி குன்றிய மகன்
கொரோனாவால் உயிரிழந்தை தந்தை, தாய்
  • Share this:
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கே. வி.பி கார்டனில் வசித்து வந்தவர் ஏ.கே.அருணாச்சலம் (வயது 62). இவருடைய மனைவி பெயர் கீதா (வயது 58) இவர்கள் ஒரே மகன்  மணி (வயது 26) மூளை வளர்ச்சி குன்றியவர்.

சென்னையில் கொரானா வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கே.வி.பி. கார்டனும் அடங்கும். கடந்த சில வாரங்களாக இப்பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலரான புலவர் அருணாச்சலம் கண் பார்வை குறைபாடுடைய ஒரு மாற்றுத்திறனாளி. ஆனால் தம் அறிவுக் கூர்மையால் நிர்வாக ஆற்றலால் அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்கு சங்க மாநிலத் தலைவராக(STATE PRESIDENT, ALL INDIA BLIND PROGRESSIVE ASSOCIATION) பணியாற்றி வந்தார்.


இந்த ஊரடங்கு காலத்தில் கூட பார்வையற்றவர்கள் உணவுக்கு தவித்துக்கொண்டிருக்கும் தகவல் கிடைத்தால் தம் வயதைப் பொருட்படுத்தாமல் அங்கு போய் உதவி வந்தார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளானார். இவரைத் தொடர்ந்து இவர் மனைவி கீதா மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய மகன் மணி ஆகியோரும் தொற்றுக்கு ஆளாயினர். மூவரும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.Also read... தொடரும் இ-பாஸ் மோசடி... எந்த அதிகாரிக்கு எவ்வளவு லஞ்சம்? - தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தின் முறைகேடுகள் அம்பலம்

சிகிச்சை பலனின்றி  மனைவி கீதா நேற்று இரவும் புலவர் அருணாச்சலம் இன்று காலையிலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தனர்.

இவர்களது மூளை வளர்ச்சி குன்றிய மகன் மணி  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் உள்ளார். சுயமாக இயங்க இயலாத மகனை  பெற்றோர் இருவரும் கண்ணின் இமைபோல் காப்பாற்றி வந்தனர்.
கொரோனா இவரை தற்போது தாய் தந்தையின்றி தவிக்கவிட்டுவிட்டது.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading