சென்னை தலைமை செயலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், உள்ளிட்ட தென் மாவட்டங்களில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதிவரை கனமழை முதல் அதீத கனமழை வரை பொழியும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முக்கிய துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார்,வேலுமணி, தங்கமணி, டாக்டர் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் பொதுப்பணி, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, மின் துறை, காவல் மற்றும் தீயணைப்பு துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட முக்கியத்துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Also read... பெண்ணையாறு நதிநீர் விவகாரம்: மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்கத் தவறியதாக குற்றச்சாட்டு.. நியூஸ் 18 தமிழ்நாடு பெற்ற விவரங்கள் என்ன?
கூட்டத்தில் பேசிய முதல்வர், தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும், ஓரிரு இடங்களில் ஆதீத கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. எனவே, புயலின் நிலையை உணர்ந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புயல் ஏற்பட்டாலும், அரசாங்கம் சரியான வழிவகைகளை பின்பற்றி மக்களை பாதுகாத்து வருகிறது. அதேபோல், இனி வரக்கூடிய புயலில் இருந்து மக்களுக்கு எந்த பாதிப்பும், சிரமமும் இல்லாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.