தொடங்கும் போக்குவரத்து சேவை: தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகள்

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தொடங்கும் போக்குவரத்து சேவை: தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய கோரிக்கைகள்
ஆலோசனைக் கூட்டம்
  • News18
  • Last Updated: August 31, 2020, 5:31 PM IST
  • Share this:
தமிழகத்தில் நாளை முதல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில், போக்குவரத்து தொழிற்சங்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பேருந்து சேவை துவங்குவதற்கு அரசு அனுமதி அளித்ததற்கு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம். பேருந்து சேவையும் பாதுகாப்பு அவசியம் என்ற அடிப்படையில் நெறி முறைகள் பின்பற்றப் படவேண்டும்.

Also read... கட்டணம் வசூல், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது என தனியார் கல்வி நிறுவனங்களின் நடவடிக்கைகளை அரசே ஏற்கக் கோரி வழக்கு

பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து அதனை முறைப்படுத்த வேண்டும்.


பல பேருந்துகள் ஆயுள் காலம் முடிந்து உள்ள சூழலில் பராமரிப்பு பணிக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும். ஏற்கனவே பணியில் இருந்து கொரோனோவால் உயிர் இழந்த ஊழியர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.

அதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் வழங்குவதற்கு முன்வர வேண்டும். அதே போல மாவட்டத்திற்குள் பேருந்து சேவை என்பது சிக்கலை ஏற்படுத்தும். மாவட்டங்களுக்கு இடையே முழுமையான பேருந்து சேவையை கொண்டு வரவேண்டும் என தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றுதொமுச பொருளாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading