சேலம் அருகே உயிருக்குப் போராடும் 6 வயது ஆண் யானை - மருத்துவர்கள் சிகிச்சை

ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய 6 வயது ஆண் யானைக்கு கால் நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சேலம் அருகே உயிருக்குப் போராடும் 6 வயது ஆண் யானை - மருத்துவர்கள் சிகிச்சை
உயிருக்கு போராடும் ஆண் யானை
  • Share this:
சேலம் மாவட்டம் கொளத்தூர், வட பர்கூர் காப்பு காட்டிலிருந்து நேற்று முன் தினம் உடல் மெலிந்த நிலையில் 6 வயது ஆண் யானை பெரிய தண்டாவிற்கு வந்தது. இதனை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் வனப்பகுதிக்கு விரட்டினர்.

இந்நிலையில் இன்று பெரிய தண்டா, பச்சை பாலி ஓடையில்
யானை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனையடுத்து வனத்துறையினர் கால்நடை மருத்துவரை அழைத்துச்சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.Also read... முழு ஊரடங்கால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது - சென்னை மாநகராட்சி ஆணையர்

இதில் யானை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, வயிற்று போக்கு ஏற்பட்டு உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டுள்ளதாகவும், தற்போது கொடுக்கும் சிகிச்சையில்ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு வருவதாகவும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading