7.5% முன்னுரிமையில் மருத்துவப் படிப்பில் இடம்... கல்வி செலவுக்கு உதவியை எதிர்பார்க்கும் மாணவர்

Youtube Video

கட்டட வேலைக்கு செல்லும் தாய் முருகம்மாளின் ஒரு நாள் ஊதியமான 200 ரூபாயை கொண்டு, குடும்பத்தை நடத்துவதே கஷ்டம் எனும் சூழலில், நல் உள்ளங்களின் உதவியை எதிர்பார்த்திருக்கிறார் கோவிந்தராஜ்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், வறுமை நிலையிலும் கடுமையாக படித்து, 7.5% முன்னுரிமை மூலம் மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்கிறார். தங்குவதற்கு சரியான வீடு கூட இல்லாத நிலையில், படிப்பிற்கான செலவை சமாளிக்க முடியாமல் தவிக்கிறது அவரது குடும்பம்.

  திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் ஊராட்சி, கவுண்டப்பனூர் கிராமத்தில் உள்ள கோவிந்தன் நகரைச் சேர்ந்த மாணவர் கோவிந்தராஜ். இவர் வசிப்பது சிறிய குடிசை. அந்த குடிசையின் முன்புறம் மட்டுமே சுவர் இருக்கிறது. மற்ற 3 பக்கமும், தென்னங்கீற்று கொண்டு மறைத்திருக்கின்றனர். இந்த சிறிய குடிசையிலும் படிப்பதற்காகவும், எழுதுவதற்காகவும், 2 கருங்கற்களை வைத்து, அதன்மேல் வழவழப்பான கல் போட்டு மேசை உருவாக்கி இருப்பதில் இருந்தே, படிப்பு மீது கோவிந்தராஜ் கொண்ட காதலை அறியலாம். இலவச மின்சாரம் தருவதற்காக தமிழக அரசு வழங்கிய "ஒற்றை விளக்கே" இவருடைய கல்விக்கு ஒளி பாய்ச்சி வருகிறது.

  10 ஆண்டுகளுக்கு முன்னரே தந்தை இறந்துவிட்ட சூழலில், பள்ளி விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்று தாய்க்கு உதவி வந்துள்ளார் கோவிந்தராஜ். 10-ம் வகுப்பில் 461 மதிப்பெண்களும், 12ம் வகுப்பில் 516 மதிப்பெண்களும் எடுத்திருந்த இவர், கொரோனா ஊரடங்கு போடப்பட்ட பின்னர் பகலில் கூலிவேலைக்கு சென்றுகொண்டே இரவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுள்ளார். ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு கடுமையாக படித்த இந்த மாணவர், நீட் தேர்வில் 230 மதிப்பெண்கள் பெற்று, 7.5% முன்னுரிமை அடிப்படையில் திருவண்ணாமலை அரசுக்கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்.

  Also read... சசிகலா குடும்பத்தாரிடம் ஏராளமாக பணம் உள்ளது, அதை வைத்து செயற்கையான மாயை ஏற்படுத்தலாம்: ஜெயக்குமார் கருத்து

  கல்வி கட்டணத்தில் பெரும்பகுதியை அரசு செலுத்தினாலும் எஞ்சிய தொகை, விடுதி கட்டணம், படிப்பு செலவுக்கு என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறது இவரது குடும்பம்.

  கட்டட வேலைக்கு செல்லும் தாய் முருகம்மாளின் ஒரு நாள் ஊதியமான 200 ரூபாயை கொண்டு, குடும்பத்தை நடத்துவதே கஷ்டம் எனும் சூழலில், நல் உள்ளங்களின் உதவியை எதிர்பார்த்திருக்கிறார் கோவிந்தராஜ்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: